ஓம் பச்சைக்காளிஅம்மா

ஓம் பச்சைக்காளிஅம்மா
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.- ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.!

என்னையும் நட்புடன் ஏற்ற உள்ளங்கள்..,

பார்வை பதித்தவர்கள்..,

ஒன்று படுவோம்..! வெற்றி பெறுவோம்..!

ஒன்று படுவோம்..! வெற்றி பெறுவோம்..!
நம் சந்ததியினர் வாழ தகுதியற்ற நிலத்தை எங்கும் ஒருபோதும் உருவாக்கி விட வேண்டாம்...
Loading...

வியாழன், செப்டம்பர் 01, 2011

கி.மு - கி.பி. - மனிதன். - பகுதி - 1

                                      ரிவர்ஸ் கீர், சங்க காலத்திற்க்கு முன்னால், சரித்திர காலத்திற்க்கு முன்னால், மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதனே தோன்றிய காலம் வரை, பின்னால் நடந்து சுற்றிப் பார்க்க தயாராகுங்கள். இது ஹைட்டெக் மொழியில் ஒர் அகழ்வாராய்ச்சி சுற்றுலா.’’

மனிதன்:

அகன்டவெளியின் வரலாற்றில் சுமார் ஐந்தாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய மண்டளமோ, பூமி என்கிற தக்குநோன்டு கிரகமோ கிடையாது. சுமார் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் அகன்டவெளியில் சிதரியவன்னம் இருந்த தூசியும், துகல்களும் கொதித்துக்கொண்டிருந்த குடிக்கற்களும் இனைந்து ஒரு நெருப்பு கோளமாக உருண்டுத் தெரண்டது. பிறகு அதன் மேற்பரப்பு பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து கொண்டே வந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது. அந்த உருண்டை சூரிய மண்டளத்தின் தலைவனான சூரியனைச் சுற்றி வளம் வரவும் ஆரம்பித்தது.

பூமி என்று நாம் இப்போது அழைக்கிற அந்த பெயரில்லாத உருண்டையின் எந்த இண்டு, இடுக்கிலும் புல், செடி, கொடியோ, கடுகலவு உயிரிணமோ கிடையாது. அப்போது பூமி ஒரு வெறும் ஏழாயிரத்தி தொள்ளாயிரத்தி இருபத்திஏழு மயில் விட்டமுள்ள மிதக்கும் பாறை.’’

சுமார் நூறு கோடி ஆண்டுகளுக்கு பிறகே பூமியில் கடல்கள் உருவாகின. அனேகமாக முன்னூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்குள் பாக்ட்டீர்யா என்கிற நுண்ணுயிர்கள் தோன்றின. நியாயமாக இந்த பாக்ட்டீர்யா தான் நம் முதன்மையான எள்ளுத்தாத்தா. கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன, செடிகள் கார்பன்-டை-ஆக்சைட் வாயுவை உணவாக்கிக்கொண்டு ஆக்சிஜன் வாயுவை வெளிப்படுத்தின இன்றைக்கும் உலகில் உயிரிணங்கள் தோன்ற வழிவகுத்த தாய் செடி, கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் மனிதன் இல்லை, ஏன் எந்த உயிரிணங்களும் இல்லை.

சாமாணியர்களுக்கும் பரிச்சையமான மீன் வகைகள் தான் முதலில் தோன்றிய உருப்படியான உயிரிணங்கள். இவை தோன்றியது சுமார் நாற்ப்பது கோடி ஆண்டுகளுக்கு முன். பிறகு பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன தோன்றி படிப்படியாக வளர்ந்து டைனோசர்களாக விஸ்வரூபம் எடுத்தன. இருபத்தி ஐந்து கோடி வருஷங்களுக்கு முன் தொடங்கி ஆறு கோடி ஆண்டுகள் வரை பூமியில் நடைப்பெற்றது டைனோசர்கள் அடங்கிய ஊர்வன யுகம் தான். டைனோசர்கள் நிமிர்ந்தால் அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டடம் உயரத்திற்க்கு இருந்தாலும் அவை போட்டது முட்டைகளே.

பத்து கோடி ஆண்டுகளுக்கு உலகில் டைனோசர்கள் ஆட்சி தான். கூடவே குட்டி போட்டு பால் கொடுக்கும் எலி குஞ்சி சைஸ் பிராணிகள் தோண்றின டைனோசரின் விரல் நெகம் அளவு கூட இவை இல்லை என்றாலும் நேரடியாக குட்டி போடுவதென்பது ஆச்சர்யமான பரிணாம வளர்ச்சி. மம்மல்ஸ் என்கிற பாலூட்டிகளின் இந்த ஆட்சி சுமார் ஆறறைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியது, இன்று வரை தொடர்கிறது. இதில் ஒர் உயிரிணம் தான் மனிதன்.

மொத்தமாக பூமியின் காலத்தை நூறு சதவிகிதம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பாலூட்டிகளின் ஆட்சியின் பங்கு நான்கு சதவிகிதம் தான், இதில் குறிப்பாக மனிதன் என்கிற ஸ்பெஷல் உயிரிணத்தின் வரலாறு வெறும் புள்ளி ஒரு சதவிகிதம் மட்டுமே. ஆனால் என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுகிறோம். பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியின் போது பல்வேறு வகையானகுரங்குகளைப் போல பல விதமான மனிதர்கள் தோன்றினார்கள். அதில் மார்டன்மேன் எனப்படுகின்ற நாம் தோன்றியது சுமார் நாலுலெட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான். தற்போது நம்மோடு வலய வந்து பல பெண்களை அலரவைக்கும் கரப்பான்பூச்சி கூட இருபத்தி ஐந்து கோடி வருஷங்களாக பூமியில் வசித்து வருகிறது. கரப்பான்பூச்சி நம்மை பார்த்து நேற்று வந்த பய என்று தாராலமாக வரலாற்றுச் சான்றோடு சொல்லலாம். ஹோமோசேப்பியன்’’ என்று அழைக்கப்படுகிற நாம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவின் நடுப்பகுதியில் தான். ஆப்ரிக்க கண்டத்தைப் பாருங்கள் மொத்த மனித சமுதாயத்தின் இதயம் போல அது அமைந்திருப்பதை கவனிக்கும் போது வியப்பு ஏற்ப்படுகிறது. ஜாதி, மதம், நாடு, மொழி எதுவுமே இல்லாமல் நிர்வாணமாக ஜடைமுடியோடு உருமிக்கொண்டே ஆப்ரிக்க நாடுகளில் உலாவிய அந்த மனிதன் தான் பிற்க்காலத்தில் தோண்றிய சாக்ரடீஸ், புத்தர், அலெக்ஸ்சாண்டர், நியூட்டன், பீத்தோவன், மைக்கேல் ஏஞ்சலோ, காந்தியடிகள், அக்பர், செங்கிஸ்கான், காளி கூலோ, ஹிட்லர், இடிஅமின், நீங்கள், நான்’’ எல்லோருக்கும் முதன்மையான முன்னோர். அது மட்டும் அல்ல அந்த முதல் மனிதன் ஆண் அல்ல பெண்.’’

(புத்தகம்: கி.மு-கி.பி.
ஆசிரியர்: திரு. மதன்Sir.)

(குறிப்பு: ஒலிநாடா மூலம் கேட்டதை இங்கு பதிவுசெய்துள்ளேன்.)

Print Friendly and PDF

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

~*~தொடர்புடைய பதிவு~*~22 கருத்துகள்:

shanmugavel சொன்னது…

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

shanmugavel சொன்னது…

வித்தியாசமான பகிர்வு.நன்றி.

சார்வாகன் சொன்னது…

அருமை நண்பரே
வழ்த்துகள் தொடர்கிறேன்!!!!
நன்றி

ரெவெரி சொன்னது…

Audio Book ல கேட்டிருக்கேன்....வாசிக்கிறது...தனி சுகம்...
நன்றி ராஜா..

தமிழ் மணம் இல்லையா?

ராஜா MVS சொன்னது…

~*~shanmugavel சொன்னது…
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
வித்தியாசமான பகிர்வு.நன்றி~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..

ராஜா MVS சொன்னது…

~*~சார்வாகன் சொன்னது…
அருமை நண்பரே
வழ்த்துகள் தொடர்கிறேன்!!!!
நன்றி~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..
என் Follower ஆனதுக்கு மிக்க மகிழ்ச்சி..

மாய உலகம் சொன்னது…

கி.மு & கி.பி பற்றிய அலசல் அருமை தொடரட்டும் நண்பரே வாழ்த்துக்கள்

மகேந்திரன் சொன்னது…

அருமையான ஆராச்சி
அழகுக் கட்டுரை.

ராஜா MVS சொன்னது…

~*~ரெவெரி சொன்னது…
Audio Book ல கேட்டிருக்கேன்....வாசிக்கிறது...தனி சுகம்...
நன்றி ராஜா..
தமிழ் மணம் இல்லையா?~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..
இல்லை...

ராஜா MVS சொன்னது…

~*~மாய உலகம் சொன்னது…
கி.மு & கி.பி பற்றிய அலசல் அருமை தொடரட்டும் நண்பரே வாழ்த்துக்கள்~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பா..

ராஜா MVS சொன்னது…

~*~மகேந்திரன் சொன்னது…
அருமையான ஆராச்சி
அழகுக் கட்டுரை~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

அறிந்துகொள்ள வேண்டிய பரிணாமக் கோட்பாட்டை பதிவிட்டமை குறித்து மகிழ்ச்சி.

ராஜா MVS சொன்னது…

~*~முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
அறிந்துகொள்ள வேண்டிய பரிணாமக் கோட்பாட்டை பதிவிட்டமை குறித்து மகிழ்ச்சி.~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..

சம்பத்குமார் சொன்னது…

அனைத்துமே அறிய தகவல்கள்

ஆராய்ச்சிகள் தொடரட்டும் நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

மாலதி சொன்னது…

பழமையான செய்திகளை சிறப்பாக செய்து இருகிக்ரீர்கள் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

ராஜா MVS சொன்னது…

~*~சம்பத்குமார் சொன்னது…
அனைத்துமே அறிய தகவல்கள்
ஆராய்ச்சிகள் தொடரட்டும் நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..

ராஜா MVS சொன்னது…

~*~மாலதி சொன்னது…
பழமையான செய்திகளை சிறப்பாக செய்து இருகிக்ரீர்கள் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. சகோ..

கவிப்ரியன் சொன்னது…

Follower ஆக சேர்ந்தமைக்கு நன்றி நண்பரே! இனி நானும் உங்கள் வலைப்பதிவு வாசகன்.

ராஜா MVS சொன்னது…

~*~கவிப்ரியன் சொன்னது…
Follower ஆக சேர்ந்தமைக்கு நன்றி நண்பரே! இனி நானும் உங்கள் வலைப்பதிவு வாசகன்.~*~

உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்
மிக்க நன்றி.. நண்பரே..

மாய உலகம் சொன்னது…

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பா

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 1

தமிழ் விரும்பி சொன்னது…

அறிய பலக் கருத்துக்கள், நல்லப் பதிவு, பதிவுக்கு நன்றிகள் நண்பரே!

Related Posts Plugin for WordPress, Blogger...

நினைவில் வை..,

நன்றி மீண்டும் வருக!

தீதும், நன்றும் பிறர்தர வாரா..! -கணியன் பூங்குன்றனார்

எனக்கு எல்லோரையும் நம்பும் குணம் ஆனால் "Suspect Everything" என்கிறார்.., -கார்ல் மார்க்ஸ்.

காலத்தின் மாற்றம்..!