ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 10 படிப்பினைகள்.
என்று பெறப்போகிறோம், இப்படிப்பட்ட குணாதிசயங்களை/நற்பண்புகளை?
1.அமைதி:
நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அல்லது இழப்பை தாங்க முடியாமல் ஒப்பாரி வைத்து அழும் ஒரு காட்சியைக் கூட காண முடியவில்லை. இழந்த வருத்தமும், சோகமும் அப்பிய முகங்களினோடு தான் மக்களை பார்க்க முடிந்தது.

2.கண்ணியம்:
தண்ணீருக்காகவும், பொருட்களுக்காகவும், சீராக, ஒழுங்காக வரிசையில் நின்று பொருட்களை வாங்கிய விதம். முண்டியடித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், "எனக்கு கிடைக்கவில்லையே" என வசை மாறி பொழிந்துக் கொண்டும் யாரும் நடக்கவில்லை.
3.ஆற்றல், திறமை:
நம்ப முடியாத கட்டிடகட்டமைப்பு. கட்டிடங்கள் கொஞ்சம் ஆட்டங்கண்டாலும், அப்படியே நிலைகுலைந்து சரியாமல், இருந்த நிலை. அதை அப்படி கட்டிய திறமைமிக்க வல்லுனர்கள். நம் பகுதியில், மறுபாதி கட்டிக் கொண்டிருககும் பொழுதே, முந்தைய பாதி இடிந்து விழும் அபாயத்தில் தான் நம் காண்டிராக்டர்கள் நடந்து கொள்கிறார்கள். (எல்லோரும் அல்ல).
4.நல்ல எண்ணம்/நற்பண்பு:
எது இன்றைக்கு வேண்டுமோ/அன்றைய தேவையோ, அதை மட்டுமே வாங்கியது. இதன் மூலம், மற்றவர்களுக்கும் கிடைக்க ஏதுவாய் அமைந்தது. பதுக்கல்/கள்ள மார்க்கெட்டில் விலை உயர்த்தி விற்பது போன்ற செயல்கள் நடைபெறவில்லை.

5.ஒழுங்கு/கட்டுப்பாடு:
சந்தடி சாக்கில், குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சூறையாடலும், கொள்ளையடித்தலும் நடக்கவில்லை. கார் ஹார்னை காது செவிடாகும் அளவிற்கு அடித்து, ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் மோசமாக நடந்து கொள்ளாமை. ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் இருந்தது. நன்றாக, ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டது.

6.தியாகம்/அர்ப்பணிப்பு:
ஐம்பது ஊழியர்கள் அணு உலை இடத்திலேயே தங்கியிருந்து, உலைகளை குளிர்விப்பதற்காக, கடல் தண்ணீரை வாரி இறைத்தது. அப்படிப்பட்டவர்களுக்கு, எப்படிப்பட்ட கைம்மாறு செய்யப் போகிறார்கள்?

7.அன்பு/கருணையின் அடிப்படையில் மக்களின் நலன் காத்து பேணுதல்:
உணவகங்கள் சாப்பாட்டு விலையை குறைத்துக் கொண்டன. ஏ.டி.எம்(தானியங்கி பண பட்டுவாடா கருவி) எந்த வித பாதுகாப்புமின்றி, தனித்து விடப்பட்ட நிலையிலும் பாதுகாப்பாக இருந்தது. பலம் வாய்ந்தவர்கள், பலவீனர்களை கவனித்து கொண்டது.

8.பயிற்சி:
வயது முதிர்ந்தவர்களும், குழந்தைகளும்,என்ன செய்ய வேண்டுமென்பதை அவரவர் அறிந்து வைத்திருந்தது/அதன்படி நடந்து கொண்டது.

9.பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள் நடந்த விதம்:
பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள் நடந்து கொண்ட விதம். செய்தித்தாள்களிலும், செய்தி அறிக்கைகளிலும், சுயகட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டது. “நான்”, “நீ” என்று போட்டி போட்டு செய்தி வெளியிடாமல், அமைதியான முறையில் செய்தி வெளியிட்டார்கள். நம் சேனல்கள், "என்னால் தான் இந்த நிலநடுக்கமே நடந்தது" என்றும், “இதை வெளியிட்ட முதல் சேனல் நாங்கள் தான்” என்று மார்தட்டிக்கொண்டு நடந்திருப்பார்கள்.

10.மனசாட்சியின் அடிப்படையில் நடந்து கொண்டது:
சூப்பர் மார்க்கெட்டில், மின்சாரம் நின்று போனவுடன், எடுத்த பொருட்களை அந்தந்த அலமாரிகளிலேயே திரும்ப வைத்து விட்டு, அமைதியாக திரும்பியது.

நிலநடுக்கத்தால், குறுக்கும் நெடுக்குமாக, பிளக்கப்பட்ட சாலையை, குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சாலையை, மார்ச்17ந்தேதி ஆரம்பித்து, ஆறு நாட்களுக்குப் பின்னர், பிளவை/சரிவை/ஆழ குழியை சரி செய்து, போக்குவரத்தை, மீண்டும் அந்த சாலையிலே ஏற்படுத்திய விதம், நம்மை புல்லரிக்க வைக்கிறது.
|
|
Tweet
|

1 கருத்துரைகள்:
இது காலத்தின் தேவையறிந்த ஒரு பதிவு. சுனாமி வந்த ஓரிரு நாட்களில் நானும் எனது வலையில் ஓரு பதிவை இட்டிருந்தேன்.
நாம இப்படி செய்வோமா என்று....
எனது வலையிலும் உங்கள் வலை முகவரியை தொடுப்பு கொடுத்துள்ளேன்...
நல்ல விதைகளை தொடர்ந்து விதைப்போம்... நிச்சயம் பலன் இருக்கும்....
வாழ்த்துகளுடன்
ஜோசப் இருதயராஜ்
கருத்துரையிடுக