ஓம் பச்சைக்காளிஅம்மா

ஓம் பச்சைக்காளிஅம்மா
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.- ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.!

என்னையும் நட்புடன் ஏற்ற உள்ளங்கள்..,

பார்வை பதித்தவர்கள்..,

ஒன்று படுவோம்..! வெற்றி பெறுவோம்..!

ஒன்று படுவோம்..! வெற்றி பெறுவோம்..!
நம் சந்ததியினர் வாழ தகுதியற்ற நிலத்தை எங்கும் ஒருபோதும் உருவாக்கி விட வேண்டாம்...
Loading...

திங்கள், செப்டம்பர் 24, 2012

உன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..!

     ம் பச்சைகாளி அம்மா

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ!

                                                                                                           -அருணகிரி நாதர்

ராஜா MVS

Print Friendly and PDF
     ம் பச்சைகாளி அம்மா

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ!

                                                                                                           -அருணகிரி நாதர்

ராஜா MVSபுதன், டிசம்பர் 21, 2011

மகாவீரர்...

                                                      கோபத்தை அமைதியாலும், மானத்தை பணிவினாலும், மாயையை கபடம் இன்மையாலும், பேராசையை மன நிறைவினாலும் வெல்லு.
                                                                      - மகாவீரர்

கி.மு. ஆறாம் நூற்றாண்டு. வைசாலி நாட்டின் சிற்றரரசான குண்டகிராமத்தின் அரசன் சித்தார்த்தன். தன் மனைவி திரிசலா தேவியோடு, சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தான்.

தான் கண்ட கனவைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள், அரசி திரிசலை.

மன்னவா, இளஞ்சூரியன் வானில் உதித்து வருகிறான். நம் நாடு முழுதும் பொன்னும் மணியும் இறைந்து கிடக்கிறது. அவற்றின் நடுவே, பளிங்கு வெண்நிற யானை ஒன்று, துதிக்கை உயர்த்திப் பிளிறியபடி ஓடிவருகிறது... இப்படி ஒரு கனவை இன்று விடிகாலை நேரத்தில் கண்டேன். இதற்கு என்ன பொருள்.?!’’

திரிசலை கேட்க, தேவி, நம் வம்சத்தில், உலகை உய்விக்கும் மகான் ஒருவன், நம் மகனாகப் பிறக்கப் போகிறான்...!’’ மகிழ்வோடு சொன்னான், மன்னன் சித்தார்த்தன்.

அதே ஆனந்தத்தில், வெகு சீக்கிரமே கருவுற்றாள் திரிசலை.

வயிற்றில் கருவளர வளர அவளுக்குள் வருத்தமும் வளர்ந்தது. காரணம், மூன்றாம் மாதம் முதலே முட்டியும் புரண்டும் வயிற்றுக்குள் உதைத்தும் வளைய வரவேண்டிய சிசு, சிறிதும் அசைவின்றி சும்மாயிருந்தது. இப்போதுபோல் ஸ்கேனிங் வசதியெல்லாம் அப்போது இல்லாததால், குழந்தையின் வளர்ச்சியையோ, அது உயிருடன் இருப்பதையோ, உறுதி செய்துகொள்ள முடியாமல் தவித்தாள் திரிசலை.

ஆனால், அவளது கருவில் வளர்ந்துகொண்டிருந்த சிசுவோ, அப்போதே சிந்தித்துக் கொண்டிருந்தது. கருவில் நம்மைத் தாங்கும் தாய்க்கு, நாம் உருண்டும், புரண்டும், உதைத்தும் உபத்திரம் செய்தால், அதன் மூலம் ஏற்படும் வலி, நம் தாய்க்கு வேதனை தரும். எனவே, அசையாமல் இருப்போம்!’’ முடிவுசெய்தது.

வழக்கமாக, கருவில் இருக்கும் குழந்தைக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, தாய் உருளாமல் புரளாமல் படுப்பாள். ஆனால், திரிசலை தாங்கிய கருவோ, தாய்க்குப் பிரச்னை தரக்கூடாது என்பதற்காக, தான் அமைதியாயிருந்தது. அதனால்தான், சிசுவின் வளர்ச்சியை உணரமுடியவில்லை திரிசலையால்.

மாதங்கள் மெதுவாக நகர்ந்தன. கி.மு. 599-ம் ஆண்டு {சிலர் 549 என்பர்} சித்திரைமாதம், சுக்லபட்சம், திரியோதசி திதியுடன் கூடிய நாளில், திரிசலையின் வருத்தம் தீரும்படி, அவள் அன்றுவரை தாங்கிய கரு, திருவாக... குழந்தையாகப் பிறந்து அழுதது.

அதுவரை அழுதுகொண்டிருந்த திரிசலை, மகிழ்ச்சியால் சிரிக்கத் தொடங்கினாள்.

மகன் பிறந்தான் என்று மகிழ்ந்தார், மன்னன் சித்தார்த்தன். தாங்கள் கொஞ்சி விளையாட ஒரு தம்பி வந்து விட்டான் என்று கொண்டாடினார்கள், அண்ணன் நந்திவர்தனும், அக்காள் சுதேஷணையும்.

நல்லதோர் நாளில், எல்லோரையும் அழைத்து குழந்தையைத் தொட்டிலிலிட்டு, வர்த்தமானன்’’ என்று பெயர்சூட்டினார், சித்தார்த்தன். வாய்நிறைய கூப்பிட்டார்கள் எல்லோரும்.

செழிப்பு மிக்க அரசகுடும்பத்தின் செல்லக் குழந்தை என்பதால், எந்தவித கவலையும், கஷ்டமும் தெரியாமல் வளர்ந்தான் வர்த்தமானன்.

அவனுக்கு எட்டுவயது நிரம்பியதும், அக்கால வழக்கப்படி, அரசர்களுக்கு உரிய கலைகளைக் கற்கவும், கல்விபயிலவும் பள்ளிக்கு அனுப்பினார், சித்தார்த்தர்.

பாடம் போதிக்கப் பிறந்தவனுக்கு பாடம் கற்கப் பிடிக்குமா என்ன? அதனால், எதையும் கற்றிடும் ஆர்வம் வரவில்லை, வர்த்தமானனுக்கு. அதை அறிந்த அப்பா சித்தார்த்தர், மகனே, பள்ளியில் நீ கஷ்டப்பட வேண்டாம். இங்கேயே வந்து உன் இஷ்டப்படி இரு..!’’ என்று சொல்ல, திரும்பிவந்து, அரண்மனை வாசத்தைத் தொடர்ந்தான் வர்த்தமானன்.

அரசினை அப்பாவுக்குப் பின் சுமந்திட அண்ணன் இருந்ததால், சுமை ஏதும் இல்லாமல் சுகமாக இருந்தான் வர்த்தமானன். அரண்மனைவாசம், சுகவாழ்வு என்றாலும், எவருக்கும் எந்த வகையிலும் துன்பம் தராமல், அன்பு அன்பு... அன்புமயமாகவே வாழ்ந்தான். வர்த்தமானனுக்கு தக்க வயது வந்ததும், அன்பு அழகு, அறிவு, அடக்கம் அனைத்தும் நிறைந்த, யசோதை எனும் கன்னியை கல்யாணம் செய்துவைத்தனர், பெற்றோர். {சமணர்களில் ஒரு பிரிவினர், இவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பர்.} உரிய காலத்தில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அனவஜ்யை என்று மகளுக்குப் பெயரிட்டார், வர்த்தமானர்.

வாழ்க்கைக் கடலைக் கடக்க வழிகாட்ட அவதரித்த வர்த்தமானர், தாமே சம்சார சாகரத்தில் சிக்கிக் கொண்டால் என்ன ஆவது? உறவைத் துறந்துவிட்டு, துறவை அவர் ஏற்பதற்கான சம்பவம், அவரது முப்பதாவது வயதில் நிகழ்ந்தது.

தம்முடைய வாரிசுகளையும், அவர்களுடைய வாரிசுகளையும் பார்த்துவிட்ட சந்தோஷத்தில், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதாக நினைத்தார், சித்தார்த்தர். அதனைத் தொடர்ந்து, தம் மனைவி திரிசலையுடன், அக்கால சமணமரபுப்படி, வடக்கிருந்து உண்ணா நோம்பு மேற்கொண்டார்.

மெல்ல மெல்ல ஊன் உருகி, பின்னர் எலும்பு உருகி முடிவில் உயிர் உருகிச் சென்றது அவர்கள் உடலிலிருந்து.

அனைத்தையும் பார்த்து, அதிர்ந்தார் வர்த்தமானர். பெற்றோரின் அதிகொடூர முடிவு, அவரை வாட்டியது. எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய நினைக்காத அவர்மனம், பதறியது. அதேசமயம், அவர் உள்மனம், உறவுகளை உதறியது. அதற்கு ஏற்றாற்போல், விழித்துக்கொள்ள...விடுபடு...புனிதப் பாதையை ஏற்படுத்து’’ என்று, அவருக்குள் ஓர் அசரீரி எழுந்தது. மெய்ஞானம் தேடும் வழிகாண, உறவுகளைத்துறந்து புறப்பட்டார், வர்த்தமானர்.

வர்த்தமானர் துறவு பூண்ட நிகழ்ச்சி, சமணர்களிடையே மிகச்சிறப்பாகப் போற்றப்படுகிறது. வானுறையும் தேவர்கள் தாமே நேரில்வந்து, அழகியதோர் பூங்காவிற்கு அவரை அழைத்துப் போய், துறவுக்கு வழியமைத்துத் தந்ததாக சொல்லப்படுகிறது.

துறவை மேற்கொண்ட வர்த்தமானர், மானிடப் பிறவியின் மகத்துவம் காணும் நோக்குடன், தியானத்தில் ஆழ்ந்தார். அதேசமயம், தீயோர் சிலர் தீய நோக்குடன் அவரைச் சூழ்ந்தனர்.

வர்த்தமானரை தவவாழ்வு மேற்கொள்ள விடாமல் தடுக்க, அவரைப் பலவகைகளிலும் வருத்தினர் அந்தக்கொடியவர்கள். ஆனால், எதற்கும் அஞ்சாமலும், அவர்கள்மீது கோபம் கொள்ளாமலும் அமைதியாக தவத்தைத் தொடர்ந்தார்.

பதின்மூன்று ஆண்டுகள் கழிந்தன. கேவலக்ஞானம் எனும், பக்குவ ஞானம் பெற்றார் மகாவீரர். உடல்மீது கூட பற்று வைத்தல் கூடாது என எண்ணிய அவருக்கு, உடலைப் போத்தியிருக்கும் ஆடையும் சுமையாகவே தோன்ற, அதையும் துறந்தார்.

பொய்யாமை, கொல்லாமை, விரும்பாமை இவைகளை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையே மக்களை பிறவிக் கடலிலிருந்து கரையேற்றும் என்பதை உணர்ந்தார்; அதையே போதித்தார்.

தீர்த்தம் - என்றால் குளம், கடல் போன்றவற்றைக் குறிக்கும். கரர் - என்றால் கரையேற்றுபவர், விடுவிப்பவர். வாழ்க்கை எனும் கடலில் இருந்து கரையேற்றுபவர் என்பதால், தீர்த்தங்கரர்’’ எனப்பட்டனர், சமணமத குருமார்கள். அவர்கள் வரிசையில், வர்த்தமானர், இருபத்து நான்காவது தீர்த்தங்கரராக திகழ்ந்தார். இவரே இறுதி தீர்த்தங்கரர் என்றாலும், மற்றவர்களைவிட இவரே முதன்மையானவராக பெருமை பெற்றார்.

கருவில் இருக்கும்போதே தாயின் வலி கருதி அசையாமல் இருந்து, அகிம்சை என்பது எந்தவுயிருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே என்பதை உணர்த்திய வர்த்தமானர், அதையே தம் முக்கியக் கொள்கையாக போதித்தார்.

அகிம்சையாக அறவழிபோதித்த அவரது போதனைகளை ஏற்று, அநேகர் அவரது சீடர்களாயினர். வாழ்க்கை எனும் போராட்டத்தில் எளிய முறையில் வெல்ல வழிகாட்டியதால், அவர் மகாவீரர்’’ என்றழைக்கப்பட்டார்.

மகாவீரர், பசி, தாகம், தூக்கம் தொலைத்து மௌனமாக தியானத்தில் அமர்ந்து அதன் மூலமே தம்கொள்கைகளை போதித்தார் என்றும்; இருபத்தோருபேரை சீடர்களாகக் கொண்டு அவர்கள் மூலம் சமணம் தழைக்கச் செய்தார் எனவும் இருவேறு கருத்துகள் உண்டு.

அகிம்சை, அன்பு, ஆசைவிடுதல் இவற்றையே முக்கியமான கொள்கைகளாக்கி அருள் நெறி பரவச்செய்த மகாவீரர், தமது எழுபத்திரண்டாம் வயதில் தமது அவதார நோக்கம் நிறைவடைந்துவிட்டதாக எண்ணினார்.

உயிர்களிடம் அன்பு காட்டிய அந்த மகான், தம் உடலை உதறிட மனம் கொண்டு, உண்ணா நோம்பு இருக்கத் தொடங்கினார்.

அந்த ஆண்டின் தீபாவளி நாளுக்கு முந்தைய தினம், அதிகாலையில் தமது சீடர்களை அழைத்து, தர்மத்தைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லத் தொடங்கினார், மகாவீரர். அந்த உரை, தீபாவளி தினத்தின் இரவுவரை நீடித்தது.

பனித்துளி போன்றது மனித வாழ்க்கை. இக்குறுகிய காலகட்டத்தில் மாபெரும் குறிக்கோளை நாம் எட்டவேண்டும்.. விழிப்பாக இரு.. விரைந்து கரையேறு..!’’ தன்சீடன் ஒருவனிடம் இப்படிச் சொன்னார் மகாவீரர். அதுவே அவரது இறுதி வாக்காக அமைந்தது.

அகிம்சை எங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம், இன்றும் வாழ்கிறார் மகாவீரர்.’’
~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~
மகாவீரர் பற்றிய முந்தைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

முந்தைய பதிவிற்கு பிறகு மகாவீரரை பற்றி இணையத்தில் தேடியபோது எனக்கு தமிழில் கிடைத்த தகவலை இங்கே பகிர்ந்துள்ளேன். இவரின் சொற்பொழிவு, பொன்மொழிகள் தமிழில் எனக்கு கிடைக்கவில்லை.(ஆங்கிலம் எனக்கு முழுமையாக மொழிபெயற்கத் தெரியாது.)

மகாவீரர் பற்றி ஓஷோ கூறியது...
மகாவீரர் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது ஆடை அணியாத காரணத்தால் ஒருவர் மகாவீரரை கல்லால் அடித்தார், அவரை மகாவீரர் மண்ணித்துவிட்டார் என்று பலர் எழுதுகிறார்கள், இது முற்றிலும் தவறு. ஒருவருக்கு மனதில் தண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் மண்ணிக்கவேண்டும் என்ற எண்ணமே தோன்றும். மகாவீரர் இந்த எண்ணங்களையெல்லாம் கடந்து எண்ணங்களற்ற நிலையை அடைந்தவர். ஆகயால் இனி இதுபோல் எழுதாதீர்கள் என்று வன்மையாக கண்டிக்கிறார்.
 - ஓஷோ...

துறவிகள் நெருப்பை’’ தொடக்கூடாது என்று எப்போதோ படித்தேன். என்ன காரணம் என்று அங்கே கூறிப்பிடவில்லை. ஆகயால் தான் தறவிகள் பிக் ஷை எடுத்து உண்ணுகிறார்கள்.

நேற்று இரவு அலைப்பேசியில் என் தம்பியோடு பேசிக்கொண்டிருக்கும் போது மேலேயுள்ள விஷயத்தை அவனிடம் கேட்டேன். துறவு என்பது அனைவரையும், அனைத்தையும்{உணவு, உடை, இருப்பிடம்} துறந்துவிட்டு செல்வதால், தனக்கன்று தனியாக சமைக்கூடாது என்பதாக இருக்கலாம் என்றான்.
சரி... பிக் ஷை எடுத்து உண்ணுகிறார்கள் என்று நான் குறிப்பிட்டதால் அவன் இப்படி சொல்லியிருக்களாம் என்று பிறகு தோன்றியது.

பிறகு, அனைவரையும் துறந்துவிட்டு செல்வது துறவு என்றான். சிறுவயதில் நானும்கூட இப்படிதான் நினைத்திருந்தேன். பலரும் துறவுக்கு விளக்கம் இதுதான் கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் துறவுக்கு இதுஅல்ல விளக்கம்.
துறவு என்பது அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துதலே உண்மையான துறவு.’’
வேண்டியவன் - வேண்டாதவன், நண்பன் - விரோதி, நல்லவன் - கெட்டவன், அவன் திருடன் - இவன் திருடாதவன், என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் கருணையுடன் நடத்துவதே உண்மையான துறவியின் இலட்சனம்.

இது என்அறிவுக்கு எட்டிய கருத்து. இதில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் கூறு(குட்டு)ங்கள் திருத்திக்கொள்கிறேன்.

நெருப்பை ஏன் அவர்கள் தொடக்கூடாது? என்பது, தங்களுக்கு தெரிந்தாலும்  பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்... நண்பர்களே...
நானும் தெரிந்துக்கொள்கிறேன்...

நன்றி...

~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~செவ்வாய், டிசம்பர் 06, 2011

குழந்தைகளை சூழும் `இருள்’

                                                               குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பெரும்பாலும் அந்த குறும்புத் தனங்கள் ரசிக்கப்படும் என்றாலும், சில நேரங்களில் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் அது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரையில் குறும்புத்தனம் இயல்பானது. அவர்களின் அமைதிதான் கவனிக்கத்தகுந்தது. குழந்தைகள் குறும்புத்தனம் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டால் உடனே கவனித்து அதற்கான காரணங்கள் ஆராயப்படவேண்டும்.

குடும்பசூழல்:
குழந்தைகள் வாழும் குடும்ப சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் குழந்தைகளின் மன நிலையும் இருக்கும். குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வயது முதல் குழந்தையின் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் வளர்கிறது. ஒரு வயது குழந்தைக்கு சுற்றுச்சூழல் எல்லாமே புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்கு வாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கிவிடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவர்களின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும்.

உடல் உபாதைகள்:
தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளை குழந்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு அசவுகரியம் என்பது மட்டுமே குழந்தைகளுக்கு புரியும். அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்புக்கு மாறாக அவை அமைதிகாக்கும். அந்த மவுனத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, உற்சாகப்படுத்த முயற்சி செய்வது எல்லாம் வீண். குழந்தைகளிடம் அன்பாக விசாரித்து அமைதிக்கான காரணத்தை கண்டறிந்து, அந்த உபாதைகள் நீக்க முயற்சி செய்ய வேண்டும்.

நண்பர்களுடன் சண்டை:
வெளியே ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் மனதை பாதிக்கும் தன்மை கொண்டது. அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தெரியாமல் குழந்தைகள் அமைதிகாக்கும். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு ஆர்வமாக விளையாடுவார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்படும். சண்டையில் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் விளையாட அனுப்பமாட்டார்கள் என்று பயந்தும் அமைதியாகிவிடுவதுண்டு. விளையாட்டில் ஏற்படும் தோல்வி, பின்னடைவு, மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல் போன்றவைகளும் குழந்தைகளை மவுனமாக்கிவிடும்.

பயம்:
ஏதேனும் துயரச் சம்பவமோ, பயப்படும்படியான விஷயமோ குழந்தைகள் கண்முன்னே நடந்தால், குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து பயத்தில் அமைதியாகிவிடுவார்கள். எத்தனை குறும்புத் தனமான குழந்தையாக இருந்தாலும் அவர்களின் மனது மென்மையானதுதான். அந்த பூவின் மனதிற்குள், அதிர்ச்சிகள் ஏதேனும் அரங்கேறி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தனிமை:
அளவு கடந்த தனிமை குழந்தைகளை அமைதியாக்கி விடும். குழந்தைகள் பேசவும், பழகவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்வது மற்றவர்களை பார்த்துதான். யாருமே இல்லாத தனிமையில் அவர்கள் வெறுமையை உணர்வார்கள். அந்த வெறுமையின் அழுத்தம் அவர்களை மவுனமாக்கிவிடும். இந்த வகை அமைதி அவைகளின் அறிவு வளர்ச்சி, செயல்திறனை பாதிக்கும்.

அவமரியாதை:
குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ, அவமதிப்பதோ கூடாது. ஏனென்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.

அலட்சியம்:
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக்கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.

அமைதி:
பக்குவப்பட்ட மனிதர்கள் அமைதியாக இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அமைதி என்பது மனிதனை பண்படுத்தும் ஞானம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளுக்கு அமைதி என்பது பல்வேறு மனப் போராட்டங்களால் ஏற்படும் அவஸ்தை. ஒவ்வொரு அமைதிக்கு பின்னும் பல ஆழ்ந்த காரணம் அடங்கி இருக்கும். அவை அனைத்துமே அவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.

(நன்றி: செந்தில்வயல்.)~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~
குறுந்தகவல்:-

வரவேற்பு.
காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது, ''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே, ''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால், என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?'' என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.

மும்மணிகள்.
ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரசிகமணி டி.கே.சி., கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் , ''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,'' என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார். அவர், ''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி... இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,'' என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. 

சொல்லின் செல்வர்.
ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.'' என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்  தான்  சொல்கிறேன்.''

ஞாயிறு, நவம்பர் 27, 2011

மழை நேரங்களில் மின் விபத்துகள்...

                          ழை நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் மழை, வேறு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது மின் விபத்துகள். சமைக்க, தண்ணீர் சுட வைக்க, துணி துவைக்க, தேய்க்க, காற்று வாங்க என மின்சாரத்தின் பயன்பாடுகள் அதிகம். மழை நேரத்தில் வயர் இணைப்புகள் பாதிக்கப்படுவது, மின்கம்பங்கள் சாய்வது என விபத்துகள் ஏற்பட்டு மழை நீர், ஈரப்பதத்தின் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

மின் விபத்துகளை தடுக்க, சுவிட்சுகள் மற்றும் மின் சாதனங்களை இயக்கும்போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உலர்ந்த காலணிகளை அணிந்து கொள்வது, மின்சாரம் உடல்வழியாக கடத்தப்பட்டு தரையை அடைவதை தடை செய்து மின்விபத்தை தடுக்கும். வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை மின்சுவிட்சை ஆப் செய்த பிறகுதான் பரிசோதிக்க வேண்டும். மின்அடுப்பையும் மின்சாரம் கடத்தாத இடத்தில் வைத்து பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

சில இடங்களில் வீடுகளுக்கு மிக அருகே மின்கம்பிகள் சென்று கொண்டிருக்கும். அவை தொடும் தூரத்தில் இருந்தால் அவற்றை கைகளாலோ, கம்புகளாலோ தொடக் கூடாது. கல்லெறிதல், தண்ணீர்கொட்டுவது, பொருட்களை அதன்மீது படும்படி பயன் படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். வீட்டுக்குள் மின்இணைப்பு வயரிங் செய்து பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மழை நேரத்தில் மின்காப்பு (இன்சுலேசன்) பாதிக்கப்படலாம். இதனால் மின்ஒழுக்கு ஏற்பட்டு ஷாக்’’ அடிக்க வாய்ப்பிருக்கிறது. பாதிப்புகளை உடனடி யாக சரி செய்துவிட வேண்டும்.

விபத்தால் இதயத்துடிப்பு நின்று போயிருப்பவர்களுக்கு செயற்கை சுவாச முறையுடன் இதய இயக்க முதலுதவியும் அளிக்க வேண்டும். மார்புக் கூட்டின் மையப் பகுதிக்கும், இடதுபுறத்துக்கும் இடையில் கையை வைத்து அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு சுமார் 40 முறை இப்படி செய்யலாம். அதே நேரம் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட வேண்டும்.

துண்டான வயர்களை டேப்’’ கொண்டு ஒட்டிப் பயன்படுத்துவது, தரமற்ற உபகரணங் களைப் பயன்படுத்துவது போன்றவை மழைநேரத்தில் மின்விபத்தை ஏற்படுத்தலாம். பல்புகள் பியூஸ் போய்விட்டால் சுவிட்சை ஆப் செய்துவிட்டு, மர பெஞ்ச் மீது காலணி அணிந்து நின்று கொண்டு பல்பை மாற்ற வேண்டும். ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி, மிக்சி ஆகியவை பயன்படுத்துவதிலும் கவனம் தேவை. இவற்றில் மின்கசிவு ஏற்பட்டு தீப் பிடிக்க வாய்ப்புண்டு. மின்காப்பு பாதிக்கப்பட்டு வீணாகும் மின்சாரம் வெப்பசக்தியாக வெளியேறும்போது தீப்பிடிக்கிறது.

வீட்டிற்கு வெளியே நிகழும் மின்விபத்துகளும் அதிகம். மின்கம்பங்களில் கல்லெறி வது, ஏறிவிளையாடுவது, மின்கம்ப இணைப்புக் கம்பியில் மாடுகட்டுவது போன்றவை கிராமப்புறங்களில் பழக்கமாக இருக்கிறது. நகர்ப்புறங்களிலோ மின்கம்பங்களை ஒலி பெருக்கி கட்ட, பந்தல்காலாக பயன்படுத்துகிறார்கள். இவையாவும் மின்விபத்துகளை தூண்டும். மரக்கிளைகள் மின்வயரில் உரசுவது, கிளைகள் முறிந்து வயரில் விழுவது, மண் அரிப்பால் மின்கம்பங்கள் சாய்ந்துவிடுவது போன்றவை மின்விபத்துகளுக்கு காரண மாகி விடும்.

மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிக்கும் கட்டிட உச்சிக்கும் 2.4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு பக்கவாட்டில் வயர் சென்றால் 1.219 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கும் குறைவான இடைவெளி இருந்தால் மின்காப்பு பயன்படுத்த வேண்டும். விவசாயக் கிணறுகளில் மோட்டாரை இறக்கி ஏற்றுவது, எர்த் கம்பிகளை சரியாக இணைக்காமல் விடுவது, எலி, அணில் போன்ற உயிரினங்களால் வயர்கள் சேதம் அடைவது ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை.

எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் எதிர்பாராமல் விபத்துகள் நிகழலாம். எனவே முதலுதவி முறையை தெரிந்து வைத்திருப்பது நல்லது. விபத்தை அறிந்ததும் முதலில் மின்இணைப்பை துண்டிக்க வேண்டும். மரப்பெஞ்சு, நாற்காலி, ரப்பர், பாய் போன்ற மின் கடத்தா பொருட்களின் மேல் செருப்பு அணிந்து நின்று கொண்டு, தோல், கயிறு, துணி, காகிதம், சாக்கு உதவியுடன் மின் சாதனத்திலிருந்து விபத்துக்குட்பட்டவரை விலக்க வேண்டும்.

மின் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். மூச்சு குறைவாக இருந்தால் உடனே செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வாய் அல்லது மூக்கில் தன்னுடைய வாயால் ஊதி காற்றை செலுத்துவது நேரடி சுவாச முறையாகும். முதுகு தரையில் படும்படி படுக்க வைத்து, தலையை நன்கு பின்னோக்கி சாய்த்துப் பிடித்து சுவாசமளிக்க வேண்டும். மார்பு நன்கு உயரும் வரை நிமிடத்திற்கு சுமார் 20 முறை சுவாசமளிக்கலாம்.

மின்தாக்குதலால் உடலில் சருமம் தீய்ந்து புண் ஏற்படலாம். அவர்களுக்கும் முதலில் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பிறகு எரிபுண்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, கொப்புளங்கள் பாதிக்கப்படாமல் ஆடைகளை களைய வேண்டும். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரினால் புண்களை நனைக்க வேண்டும். அதே நீரில் நனைத்த துணியை புண்ணின் மீது கட்ட வேண்டும். அவரால் சாப்பிட முடிந்தால் இனிப்பான டீ கொடுக்கலாம்.

உப்புக்கரைசல் தயாரிக்க முடியாத பட்சத்தில் தூய துணியால் மின் எரிபுண்களை கட்டலாம். காயத்தில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தால் அதைக் கட்டுப் படுத்த வேண்டும். அதிகமாக சுத்த ரத்தம் வெளியேறும் போது, இதயத்துக்கும் காயத்திற்கும் இடையில் இதயத்தின் அருகே துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். அசுத்த ரத்தம் வெளியேறினால் புண்ணின் அருகிலேயே கட்டுப்போடலாம். காயத்தின் மேல் பஞ்சை வைத்து கட்டுப்போட வேண்டும். துணியும் பஞ்சும் கிருமிகள் அற்றனவாக இருக்க வேண்டும்.(நன்றி: செந்தில்வயல்.)
(படங்கள்: கூகுள்.)

~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~ ~*~
குறுந்தகவல்:-

இரவல்.
பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,'' என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம், ''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,'' என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார், ''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

பஞ்சம்.
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார், ''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?'' ஷா சொன்னார், ''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''

இறைவனுக்கே பயம்.
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,'' நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

பேசும் எந்திரம்.
பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார், ''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,'' என்றார். எடிசன் அவரிடம் சொன்னார், ''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''

அறிஞர்.
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?'' வாலி சொன்னார், ''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன். அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''  வாலி  சிரித்துக் கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!'' என்றார்.

புதன், நவம்பர் 23, 2011

என் குட்டி தேவதை..!

நீ
என்
குட்டி தேவதை
எனக்கு
கிடைத்த வரம்
என்
கைகளில் தவலும்
குட்டி நிலவு
என்
உலகம்..!

பத்து திங்கள்
சுமந்தால்
உன் தாய்
உன்னை..!உன்னோடு
சேர்த்து
அவளையும் சுமந்தேன்
என்
மனப்பையில்..!

பட்டுச்சேலையில்
தொட்டில் கட்டினாலும்
என்
மார்போடு
அணைத்து
நீ
உறங்கவே
என்
மனம் விரும்பும்
நீயும்
தான்..!

என்
முதுகோடு
கழுத்தை கட்டி
நம்
கன்னங்கங்கள்
உரசி
நீ
கொடுக்கும்
ஒற்றை முத்தம்
என்
கோபத்தை
களைய இருதியாக
நீ
கையிலெடுக்கும்
ஆயுதம்..!

உறவில் தான்
நீ
என்
மகள்
என்னை
பெற்றெடுக்காத
தாயும்
நீயே..!

அன்புடன்,
செந்தில் ராஜா MV                                                                               

Print Friendly and PDF
                                                                           
நீ
என்
குட்டி தேவதை
எனக்கு
கிடைத்த வரம்
என்
கைகளில் தவலும்
குட்டி நிலவு
என்
உலகம்..!

பத்து திங்கள்
சுமந்தால்
உன் தாய்
உன்னை..!உன்னோடு
சேர்த்து
அவளையும் சுமந்தேன்
என்
மனப்பையில்..!

பட்டுச்சேலையில்
தொட்டில் கட்டினாலும்
என்
மார்போடு
அணைத்து
நீ
உறங்கவே
என்
மனம் விரும்பும்
நீயும்
தான்..!

என்
முதுகோடு
கழுத்தை கட்டி
நம்
கன்னங்கங்கள்
உரசி
நீ
கொடுக்கும்
ஒற்றை முத்தம்
என்
கோபத்தை
களைய இருதியாக
நீ
கையிலெடுக்கும்
ஆயுதம்..!

உறவில் தான்
நீ
என்
மகள்
என்னை
பெற்றெடுக்காத
தாயும்
நீயே..!

அன்புடன்,
செந்தில் ராஜா MV                                                                               Related Posts Plugin for WordPress, Blogger...

நினைவில் வை..,

நன்றி மீண்டும் வருக!

தீதும், நன்றும் பிறர்தர வாரா..! -கணியன் பூங்குன்றனார்

எனக்கு எல்லோரையும் நம்பும் குணம் ஆனால் "Suspect Everything" என்கிறார்.., -கார்ல் மார்க்ஸ்.

காலத்தின் மாற்றம்..!